Tanglish Talks: I’m not angry…

I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

Last time, I attempted a translation of ‘Mera kuchh samaan.’  This time, I have attempted a translation of Gulzar’s ‘Tujhse naaraaz nahin’ from the film ‘Masoom’. And to repeat: Just as human body cannot exist without a ‘soul’, it is my contention that a song without a strong lyrical base is only half-alive. And this… it’s one of the most soulful songs ever.

“வாழ்க்கை” என்கிற வார்த்தை, nine times out of ten, Third Person-இல் உபயோகிக்கப்படுகிறது. “வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை,” for instance. (ஆஹா! என்ன ஒரு கற்பனை!) Or else, consider this: ” வாள் வீசும் வாழ்க்கை, நிமிர்ந்தால் தலை இல்லை.” (இதில் “வாழ்க்கை”-யை personify  செய்திருக்கிறார் கவிஞர், ஒரு villain ரூபத்தில்.) But, இதே personification -ஐ வைத்துக்கொண்டு, “வாழ்க்கை”யோடு உரையாடினால் எப்பிடி இருக்கும். அதை தான் Gulzar இந்த மாபெரும் தத்துவ பாடலில் செய்கிறார். சிறு வயதிலிருந்தே நான் ஒரு Gulzar பைத்தியம். (Maybe because I was an RD Burman பைத்தியம், and Gulzar wrote a lot of his songs.) நிறைய பேர் KISS formula-வை காட்டி “யோவ், சுலபமா புரியற மாதிரி எழுது யா,” என்பார்கள். ஆனால் எனக்கு பிடித்த பாடல்கள் (and as you guys know, படங்களும் கூட) தோண்ட தோண்ட ரசிக்க வைப்பவை, வயதாக ஆக ருசிக்க வைப்பவை. வாழ்க்கையில் நான் இருக்கும் நடு கட்டத்திலிருந்து இப்பாடலை கேட்கும் சுகத்தை “ஆறுதல் தரும் வலி” என்று சொல்லலாம். முன்னுரை போதும். பாடலுக்கு போகலாம்.

வாழ்க்கையே!
உன் கபடமற்ற கேள்விகளை கேட்டு… கோபம் இல்லை
அனால் எப்பிடி பதிலளிப்பது என்று
தலையை சொரிந்து கொண்டு நிற்கிறேன்.

உன் போக்கில் போவதற்கு
(அதாவது, வாழ்வதற்கு)
இவ்வளவு வலிகளை சுமக்க வேண்டுமென்று
நினைக்கவே இல்லை.

ஆனாலும் உன் மேல் கோபம் இல்லை!

ஒரு நிமிடம் சந்தோஷமாக இருந்தால்
மறு நிமிடம் நீ ஈட்டிக்காரன் போல் வந்து
“நான் சந்தோஷத்தை கடனாக தான் கொடுத்தேன்,
இப்போ அதற்கான வட்டி குடு” என கேட்பாய்
என்று அன்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் நான் சிரித்தால்…
உதடுகள் அந்த புன்முறுவலில் பூப்பதற்காக
கடன் வாங்கியிருக்கிறேன் என்று
எனக்கு முன்கூட்டியே தெரியும்.

அதனால் தானோ என்னவோ,
உன் மேல் கடுகளவு கோபம் இல்லை!

நீ கொடுத்த சோகங்களின் மூலம்
நான் புதிய உறவுகளை
(உறவுகளின் புதிய பரிமாணங்களை)
புரிந்து கொண்டிருக்கிறேன்.
நிழல் கிடைத்தால் கூட
கத்திரி வெயிலில் நீண்ட தூரம்
நடந்த பின் தான் கிடைக்கும்
என உணர்ந்திருக்கிறேன்.

இதையெல்லாம் எட்டாங்கிளாஸ் வாத்தியாரால்
சொல்லி தர முடியமா?
உன்னால் தான் முடியும்.
So, உன் மேல் கோபம் இல்லை!

இன்று கண்களில் தண்ணீர் ரொம்பினால்
மழைச்சாரல் போல் சிந்தி விடுகிறேன்
அனால் நாளை மன உளைச்சல் இருந்தால்
ஆறுதலுக்காக இதே கண்ணீர் வருமா?
அந்த நெருக்கடி நிலைக்காக தான்
ஒரு சொட்டு கண்ணீரை
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
அதுவும் இப்போது தொலைந்துவிட்டது.

But no worries.
That’s life, அல்லவா.
உன் மேல் கோபமே இல்லை!

Source Link

Related posts

BelleoFX’s Award-Winning Mobile App Redefines Trading: A Technological Leap in Financial Markets

Ananya Panday shares Dream Girl 2 BTS; Ayushmann Khurrana and Suhana Khan react

Google celebrates Shah Rukh Khan’s “Jawan”: Check SRK and film search.